search icon
என் மலர்tooltip icon
    • பேர்ஸ்டோ 45 பந்தில் சதம் விளாசினார்.
    • ஷஷாங்க் சிங் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இன்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக தொடக்க வீரர்களான சுனில் நரேன் - சால்ட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- பேர்ஸ்டோ களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங் 18 பந்தில் அரை சதம் கடந்தார். இவர் 54 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ரிலீ ரோசோவ் 26 ரன்னில் வெளியேறினார். தொடக்கம் மெதுவாக ஆரம்பித்த பேர்ஸ்டோ பின்னர் அதிரடி காட்டி சதம் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி 15 ஓவரில் 201 ரன்கள் குவித்தது.

    இதனால் கொல்கத்தா அணிக்கு 5 ஓவரில் 61 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஷஷாங்க் சிங் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி சிக்சருமாக மாற்றினார். இதனால் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

    பேர்ஸ்டோ 108 ரன்னிலும் ஷஷாங்க் சிங் 68 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபேவை நான் பார்க்க விரும்புகிறேன்.
    • அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்றால், அவரை தாராளமாக பிளேயிங் லெவனில் எடுக்கலாம்.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இன்னும் சில தினங்களில் தங்கள் அணி வீரர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தூதுவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக யுவராஜ் சிங் இருந்தார்.

    இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கிரிக்கெட் எதிர்காலங்கள் குறித்து யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார். ஏனெனில் அவரால் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும்.

    அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். அதேபோல அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்றால், அவரை தாராளமாக பிளேயிங் லெவனில் எடுக்கலாம்.

    ஒருவேளை அவர் அணியில் இல்லாத பட்சத்தில் இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தற்சமயம் சிறப்பான ஃபார்மில் உள்ளதாக நினைக்கிறேன்.

    இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபேவை நான் பார்க்க விரும்புகிறேன். இந்த சீசனில் நிறைய இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், உலகக்கோப்பை அணியில் நான் ஷிவம் தூபேவை பார்க்க விரும்புகிறேன்.

    மேலும் அணியின் மூத்த வீரர்கள் என்னதான் தரமான ஃபார்மில் இருந்தாலும் அதை மறந்து, வயதின் அடிப்படையில் மூத்த வீரர்கள் மீது விமர்சனங்கள் எழும். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் சிறந்த வீரர்கள். அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்த முடிவை அறிவிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    மேலும் மூத்த வீரர்கள் தொடர்ச்சியாக 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், டி20 கிரிக்கெட்டில் அதிக இளம் வீரர்களை பார்க்க விரும்புகிறேன். அது அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைக்க உதவும். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு, நிறைய இளைஞர்கள் அணிக்குள் வருவதையும், அடுத்த உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதையும் பார்க்க விரும்புகிறேன்.

    என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
    • "கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

    இயக்குனர் சங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவே. சங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

    கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார்.

    தற்போது, "கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று தனது 51வது பிறந்த நாள் முன்னிட்டு இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் சங்கருடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 71 ரன்னும் சால்ட் 75 ரன்களும் குவித்தனர்.
    • சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கினார்.

    கொல்கத்தா:

    10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் - சால்ட் களமிறங்கினர். இருவரும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாக பறக்கவிட்டனர்.

    இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. சுனில் நரேன் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சிறிது நேரத்தில் சால்ட் 75 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் - ரஸல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரஸல் 24 ரன்கள் ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ஷ்ரேயாஸ் - வெங்கடேஷ் ஜோடி டெத் ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

    • தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி.
    • படுகாயமடைந்தவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    தெற்கு பிரேசிலில் உள்ள போர்டோ அலெக்ரே நகரில் பயன்பாடு இல்லாமல், வீடு இல்லாதோருக்கு முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து, மாநில ஆளுநர் எடுவார்டோ லைட், ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேயர் செபாஸ்டியாவோ மெலோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.
    • ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார்.

    காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி நாளை மாலை கூடுகிறது. அப்போது அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி இதுவரை மக்களவை தேர்தலில் 317 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இவர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார். தற்போது உடல் நலம் காரணமாக மக்களவை தொகுதியில் சோனியாக காந்தி போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    • வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போலீசார் நடவடிக்கை.
    • போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    டெல்லியில் துவாரகா பகுதியில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட, சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் உடை அணிந்து பைக்கில் சாகசம் செய்த ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஹெல்மெட் அணியாமல் நடுரோட்டில் இருவரும் சாகசம் செய்துள்ளனர். பிறகு, கண்ணாடி மற்றும் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் பயணம் செய்து போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    • இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் பங்கேற்கவில்லை. சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.
    • பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் களம் இறங்கவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    • திரைப்படம் வருகிற மே 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • தம்பி ராமையா மற்றும் பால சரவணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான்தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. சில நாட்களுக்கு முன் படத்தின் கேரக்டர் ரிவீலிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரெயிலர் ஆரம்பத்தில் நடிகர் விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து வரும் வசனங்கள் நகைச்சுவையாக அமைந்து இருக்கிறது.

    நீண்ட நாட்கள் கல்யாணம் ஆகாத சந்தானத்துக்கு ஒரு ஜமீன் குடும்பத்து பெண்ணுடன் கல்யாணம் நடக்கிறது. அதன் பிறகு சந்தானம் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் போல டிரெயிலர் காட்சிகள் அமைந்துள்ளது. தம்பி ராமையா மற்றும் பால சரவணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த திரைப்படம் வருகிற மே 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    2021 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படத்தின் போஸ்டரில் அணிந்த உடைப் போலவே இந்த படத்தின் போஸ்டரிலும் அணிந்து இருக்கிறார்.

    வடக்குப்பட்டி ராமசாமியின் வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் வெற்றிப் பெற வேண்டுமென ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 6 மணிக்கு முன், வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
    • 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

    அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 11.1 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 25.1 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 40 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.03 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 64 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

    2ம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 6 மணிக்கு முன், வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.

    ×